346- வது பிறந்தநாள்: காமநாயக்கன்பட்டியில் வீரமாமுனிவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Oplus_16908288
தமிழ்நாடு அரசு சார்பில், தமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவரின் 346-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் உள்ள வீரமாமுனிவர் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கா. கருணாநிதி முன்னிலையில், வீரமாமுனிவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழுக்குத் தொண்டாற்றிய பேரறிஞரின் பிறந்தநாளை நினைவுகூர்ந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்







