• November 9, 2026

அனிருத் – காவ்யா  திருமணம்: குடும்பத்தினருடன் மு.க. ஸ்டாலின் கிரீஸ் பயணம்-ரஜினிகாந்தும் சென்றார்

 அனிருத் – காவ்யா  திருமணம்: குடும்பத்தினருடன் மு.க. ஸ்டாலின் கிரீஸ் பயணம்-ரஜினிகாந்தும் சென்றார்

Oplus_16908288

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம், 

நாளை நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கிரீஸ் நாட்டில்  நடைபெற உள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய.n முதல் மட்டுமே திருமண விழாவில் கலந்து கொள்கிறார்கள்

இந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி மற்றும் சபரீசன் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டனர். 

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் துபாய் வழியாக கிரீஸ் நாட்டிற்குச் சென்றுள்ள அவர்கள், திருமண நிகழ்வுகளை முடித்துவிட்டு வரும் நவம்பர் 13-ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகின்றனர்.

இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்தும் தனது குடும்பத்தினருடன் இன்று காலை சென்னையில் இருந்து கிரீஸ் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் திருமண நிகழ்வுகளை முடித்துவிட்டு வரும் 13-ம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளனர்.

 திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்தும் தனது குடும்பத்தினருடன் இன்று காலை சென்னையில் இருந்து கிரீஸ் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கிரீஸ் நாட்டில் நடைபெறும் திருமணத்தைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 21-ம் தேதி சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் என கலந்து கொள்கிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *