• November 9, 2026

கோவில்பட்டி மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடங்குகிறது

 கோவில்பட்டி மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடங்குகிறது

Oplus_16908288

கோவில்பட்டி
நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட
மீனாட்சியம்மன் சமேத  சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா
நாளை செவ்வாய் கிழமை முதல் 16 ந் தேதி வரை நடைபெற உள்ளது.

 கோவிலில் அமைந்துள்ள  வள்ளி தேவசேனா உடனுறை முத்துக்குமார சுவாமிக்கு கந்த சஷ்டி திருவிழா நடைபெற இருக்கிறது.

நாளை முதல் தினமும் மாலை 6.35 மணிக்கு
முத்துக்குமார சுவாமி மூலஸ்தானத்தில் மகா அபிஷேக பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்
நடக்க இருக்கிறது.

16ந் தேதி மாலை 5மணிக்கு முத்துக்குமார சுவாமி மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகள் மகா அபிஷேக பூஜை நடக்கிறது.

5.30 மணிக்கு பத்திரகாளியம்மன் கோவிலில் இருந்து சீர் கொண்டு வருதல் நட க்கிறது. 

 கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான 16ஆம் தேதி மாலை 5மணிக்கு முத்துக்குமார சுவாமி மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகள் மகா அபிஷேக பூஜை நடக்கிறது.

மாலை 6  மணிக்கு மேல் வள்ளி -தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. 

இரவு 7.35 மணிக்கு  வள்ளி தேவசேனா சமேத  முத்துக்குமாரசுவாமி திருவீதி உலா நடைபெறும். 

 தினமும் மாலை 6.35 மணிக்கு கந்தசஷ்டி கவசம் பாராயணத்துடன் முருகப்பெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெறும்,
பக்தர்கள் அபிஷேகப்பொருட்கள், பழங்கள், புஷ்பங்கள் வாங்கி வந்து முருகனின் அருளினைப் பெறுமாறு கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *