• November 9, 2026

காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் நன்கொடை கடும் வீழ்ச்சி 

 காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் நன்கொடை கடும் வீழ்ச்சி 

தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்துள்ள நிதிப்பங்களிப்பு அறிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 

காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் நன்கொடைகள் நடப்பு 2025-26 நிதியாண்டில் சுமார் 75 சதவீதம் அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற் கான இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டில்(நாடாளுமன்றத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு) காங் கிரஸ் கட்சிக்கு ரூ.517 கோடியே 39 லட்சம் வரை பெரிய அளவிலான நன் கொடை கிடைத்திருந்தது.

 ஆனால், நடப்பு 2025-26 நிதியாண்டில் இது வெறும் ரூ.130 கோடியே 69 லட்சமாக குறைந்துள்ளது கடந்த 12 நிதியாண்டுகளுடன் ஒப்பிடுகையில்   இதற்கு முன்பு 2015-16 நிதியாண் டில் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் நன்கொடை 86 சதவீதம் வரை சரிவை சந் தித்திருந்தது. 

அதன் பிறகு கடந்த 2 ஆண்டுகளாக ஏறுமுகத்தில் இருந்த நன்கொடை வருவாய், தற்போது மீண்டும் சரிவை நோக்கிச்சென்றுள்ளது.

கடந்த 2024-25 நிதியாண்டில் பா.ஜனதா பெற்ற நன்கொடையுடன் ஒப்பிடுகை யில், காங்கிரஸ் கட்சியின் வருவாய் மிகவும் பின்தங்கியுள்ளது.அந்த ஆண்டில் பா.ஜனதா ரூ.6,074 கோடியை 2 லட்சத்தை நன்கொடையாக பெற்றுள்ளது. இது காங்கிரஸ் பெற்ற தொகையை விட 12 மடங்கு அதிகமாகும். 

கடந்த 12 நிதி யாண்டுகளிலும் காங்கிரசை விட பா.ஜனதா 12 மடங்கு அதிக நன்கொடைகளை பெற்றுள்ளது.

பா.ஜனதாவின் 2025-26 நிதியாண்டுக்கான அறிக்கை இன்னும் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சிக்கு வழக்கமாக அதிக நிதி வழங்கும் ‘புருடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட்’ என்ற அமைப்பிடமிருந்து  வரும் நிதி பெருமளவு குறைந்துபோனதே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டில் இந்த அமைப்பிடமிருந்து 

216 கோடியே 34 லட்சம் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு வெறும் ரூ.25 கோடியாக குறைந்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *