சென்னையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 36 பேர் கைது
பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ், உத்தரவின்பேரில், அனைத்து காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீஸ் படையினர் நேற்று (9.11.2026)
சோதனைகள் , மேற்கொண்டனர்.
தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தியதில் சென்னை பெருநகர காவல் நிலையங்களில் குற்றப்பின்னணி மற்றும் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் 185 ரவுடிகள் உட்பட 222 நபர்களை பிடித்து விசாரணை செய்து, 16 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 36 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மீதமுள்ள 169 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 186 பேர்களின் தற்போதைய குற்ற செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
மேலும், சட்டம், ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ குற்றச் செயல்களிலோ ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரித்துள்ளார்.
*****







