• November 10, 2026

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில்  14-ம் தேதி இலவச செயற்கை உபகரணங்கள் பொருத்தும் முகாம்

 கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில்  14-ம் தேதி இலவச செயற்கை உபகரணங்கள் பொருத்தும் முகாம்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் நிறுவனர்  கே.ராமசாமி பிறந்தநாளை முன்னிட்டு, சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இலவச செயற்கைக் கை, கால் மற்றும் இதர உபகரணங்கள் வழங்கும் முகாம்  வருகிற 14 ந் தேதி (சனிக்கிழமை) அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

 கடந்த  6 ம் தேதி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அளவீட்டு முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு, அவர்களின் தேவைக்கேற்ப செயற்கைக் கை, கால், மூன்று சக்கர மிதிவண்டி, வாக்கர் உள்ளிட்ட உபகரணங்கள் நவம்பர் 14 அன்று வழங்கிப் பொருத்தப்படவுள்ளன.

இம்முகாமில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டு, பயனாளிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள், உபகரணங்களை பொருத்துதல் மற்றும் அவற்றைப் பராமரிப்பது குறித்த ஆலோசனைகளையும் வழங்கவுள்ளனர்.

எனவே, அளவீட்டு முகாமில் கலந்து கொண்ட பயனாளிகள் அனைவரும் தவறாமல் இம்முகாமில் கலந்து கொண்டு, தங்களுக்கான செயற்கை உறுப்புகள் மற்றும் இதர உபகரணங்களைப் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

மேலும் விவரங்களுக்கு 98433 28155, 93448 03795, 91765 76503 மற்றும் 95433 43502 ஆகிய மொபைல் எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று கல்லூரி இயக்குநர்  எஸ்.சண்முகவேல்  தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *