தென்மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான ஆக்கி: அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள்
எஸ் ஜே என் பள்ளி அணியும் அதியானா பள்ளி அணியும் விளையாடிய போது எடுத்த படம்.
தென்மண்டல ஆண்கள் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டி கோவில்பட்டியில் மூன்று இடங்களில் நேற்று 25.0926 தொடங்கியது,
இன்று இரண்டாவது நாள் போட்டிகள் நடந்தன, கிருஷ்ணா நகர் செயற்கை புல் ஆக்கி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் மேட்டுப்பாளையம் எஸ் ஜே என் பள்ளி 2-0 என்று கோல் கணக்கில் சென்னை எஸ் பி ஓ பள்ளி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது
அத்தியானா பள்ளி அரியலூர் ராம்கோ பள்ளி அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் 1-1 என்ற கோல் கணக்கில் சம நிலையில் முடிவு பெற்றதால் டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது இதில் 5-3 என்ற கோல் கணக்கில் அத்தியானா பள்ளி வெற்றி பெற்றது
நெய்வேலி ஜவகர் பள்ளி அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஹார்ட் புல்ஸ் பள்ளி அணியை வெற்றி பெற்றது

கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி 7-0 என்ற கோல் கணக்கில் புதுக்கோட்டை வைரம்ஸ் பள்ளியை வெற்றி பெற்றது
கோவில்பட்டி வேல்ஸ் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஓசூர் மகரிஷி பள்ளி அணியை 6-0 என்ற கோல் கணக்கில் அமிர்தா பள்ளியை வெற்றி பெற்றது
தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளி 6-0 என்ற கோல் கணக்கில் கோயமுத்தூர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி அணியை தோற்கடித்தது,
மேட்டுப்பாளையம் எஸ் ஜே என் பள்ளி 3- 0 என்ற கோல் கணக்கில் சென்னை வேலம்மாள் பள்ளியை வீழ்த்தியது,
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் சென்னை சூரப்பட்டு வேலம்மாள் பள்ளி 4-0 என்ற கோல் கணக்கில் நாகர் பப்ளிக் பள்ளி அணியை வெற்றி பெற்றது
சென்னை சிறுசேரி பி எஸ் பி பி பள்ளி 1-0 கோல் கணக்கில் சென்னை கேகே நகரில் உள்ள பி எஸ் பி பி பள்ளி அணியை வெற்றி பெற்றது
ஓசூர் மகரிஷி பள்ளி 4-0 என்ற கோல் கணக்கில் பக்தவச்சலம் பள்ளி அணியை வெற்றி பெற்றது
14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் அரை இறுதி லீக் போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் ஓசூர் மகரிஷி பள்ளி, தென்காசி வேல்ஸ் வித்யாலயா, மேட்டுப்பாளையம் எஸ் ஜே என் அரியலூர் ராம்கோ பள்ளி தகுதி பெற்றுள்ளன
17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா, மேட்டுப்பாளையம் எஸ் ஜே என் பள்ளி, நெய்வேலி ஜவகர் பள்ளி, கோயம்புத்தூர் அதியானா பள்ளிகள் தகுதி பெற்றுள்ளன

19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் மேட்டுப்பாளையம் எஸ் ஜே என் பள்ளி சூரப்பட்டு வேலம்மாள் பள்ளி சிறுசேரி பி எஸ் பி பி ஓசூர் மகரிஷி பள்ளி அணிகள் தகுதி பெற்றுள்ளன
மதியம் முதல் லீக் போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் நாளை மாலை வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெறும்







