நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு
கோவில்பட்டியில் நல்லாசிரியர் விருது பெற்ற மு.க.இப்ராஹிம் தலைமை ஆசிரியருக்கு சகாராவை தாண்டாத ஒட்டகம் பயிற்சி மையம் சார்பில் இலக்கியச் சாரல் அமைப்பு சார்பில் பாராட்டு விழா மற்றும் சிரிப்பு சிரப்பு புத்தகத் திறனாய்வு நடைபெற்றது.
விழாவுக்கு ப.ஜான்கணேஷ் தலைமை தாங்கினார். இந்திராணி, ராஜேஷ் சங்கரப்பிள்ளை, முருகசரஸ்வதி, ஜெகநாதன், செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போத்தி ராஜ் வரவேற்று பேசினார்.
ஓய்வு பெற்ற டி.எஸ்.பி, மனோகர், ஆசிரியர்கள் மகேந்திரன் கருப்பசாமி, ஸ்ரீதர், முருக இரத்தினம், கல்யாணசுந்தரம் ஆசிரியை பேச்சியம்மாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பாராட்டினர்.

சிரிப்பு சிரப்பு புத்தகத்தை ஆசிரியர் கார்த்திகேயன், த சாந்திபெருமாள், விரிவுரையாளர் இராஜலட்சுமி மாணவி கற்பகவள்ளி ஆகியோர் திறனாய்வு செய்தனர்.
நல்லாசிரியர் விருது பெற்ற மு.க.இப்ராஹிம் தலைமையாசிரியருக்கு இலக்கியச் சாரல் நிறுவனர் தினகரன் பாராட்டி விருது வழங்கினார் மேலும் உரத்த சிந்தனை சிவானந்தம் சிரிப்பு சிரப்பு புத்தகத்திற்கு படைப்புச் செம்மல் விருது வழங்கி பாராட்டினார் .
நல்லாசிரியர் மு.க.இப்ராஹிம் ஏற்புரை வழங்கினார். இறுதியாக நிகழ்ச்சியை சிரிப்பு என்ற சிரப்புடன் நிறைவு செய்தனர்.







