ஆயுத பூஜை விடுமுறை: விமான கட்டணம் அதிரடியாக உயர்வு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னையில் வசித்து வரும் மக்கள் விழாக்காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துச் செல்வது வழக்கம். அதன்படி, வருகிற 19-ந் தேதி ஆயுதபூஜை, 20-ந் தேதி விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.
இதனால், அரசு ஊழியர்களுக்கு 17-ந் தேதி (நாளை) சனிக்கிழமை முதல் 20-ந் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பெரும்பாலான மக்கள் இன்று தங்கள் ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டிருப்பார்கள். இதைக் கருத்தில் கொண்டு விமானங்களில் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னை – தூத்துக்குடி இடையே சாதாரண நாள் கட்டணம் ரூ.7,201; இன்றைய கட்டணம் ரூ.17,363,
சென்னை – மதுரை இடையே சாதாரண நாள் கட்டண ரூ.5,066; இன்று விமானக் கட்டணம் ரூ.8,527
சென்னை – கோவைக்கு ரூ.16,601; சென்னை திருச்சிக்கு ரூ.9,896 இன்று விமானக் கட்டணம் நிரணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை – கோவை வழக்கமான கட்டணம் ரூ.4,966 இன்றைய கட்டணம் ரூ,16,234, சென்னை – சேலம் வழக்கமான கட்டணம் ரூ.4,001, இன்றைய கட்டணம் ரூ.12,132 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கொச்சிக்கு ரூ.18,255, பெங்களூருவுக்கு ரூ.18,041ஆக விமானக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை – ஹைதராபாத் இடையே சாதாரண நாள் கட்டணம் ரூ.4,467; இன்றைய கட்டணம் ரூ.21,665 ஆக உயர்ந்துள்ளது.







