கோவில்பட்டி ரெயில் நிலையம் புதுப்பிக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்; கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்
Oplus_16908288
கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமையில் நடந்தது.தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மேரிஷீலா முன்னிலை வகித்தார்.
கோவில்பட்டி ரெயில் நிலைய புதுப்பிக்கும் கட்டுமான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இரண்டாவது நடை மேடையில் பயணிகளின் பாதுகாப்பிற்கு முழுமையான மேற்கூரையுடன் செட் அமைக்க வேண்டும். கொரோனா காலத்தில் கோவில்பட்டிக்கு வந்து சென்ற தற்போது நிறுத்தப்பட்டுள்ள ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு குறைந்தது ஐந்து போர்ட்டர்கள் பணி செய்ய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30 9 2026 புதன்கிழமை காலை 10 மணிக்கு ரெயில்bநிலையம் மேலாளரிடம் மனு கொடுப்பது. இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கோவில்பட்டி புதுரோடு, முச்சந்தி விநாயகர் கோவில் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ள அரசு மதுபான கடை மற்றும் பாண்டவர்மங்கலம் அருகில் உள்ள அரசு மதுபான கடை அருகில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதனை ஒழுங்குபடுத்த கோரி
3.10.2026 சனிக்கிழமை காலை 10 மணிக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் மனு கொடுப்பது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க தமிழரசன், இந்திய கலாச்சார நட்புறவு கழகம மாநில துணைத் தலைவர் அபிராமி முருகன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், மகேந்திரன், தியாகி விஸ்வநாததாஸ் பேரவை சங்கர், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கே கருப்பசாமி, நிர்வாகிகள் தவம் பாலாஜி, மோகன், இப்ராஹிம், வரிசை மைதீன், பகத்சிங் ரத்ததான கழகம் காளிதாஸ், லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.







