மரணம் அடைந்த இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார் இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்த்திரையுலகின் தனிப்பெரும் ஆளுமை இயக்குநர் இமயம் பாரதிராஜா சாரின் திருவுடலுக்கு நீலாங்கரையில் உள்ள அவரது இல்லம் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தினோம். சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர், எப்படியும் மீண்டு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரது மரணச் செய்தி இன்று காலை பேரிடியாக வந்தது. முத்தமிழ் […]
கோவில்பட்டி அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் ராதாகிருஷ்ணன் (48). இவர் முடுக்கு மீண்டான் பட்டியில் வசித்து வரும் இவர் இன்று பைக்கில் கோவில்பட்டியில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார். சாலைப்புதூர் அருகேஅணுகு சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் பள்ளி வாகனம் மோதியது. விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் அவரது உடலை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசா ர் கைப்பற்றி […]
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து தினமும் விருதுநகர் மாவட்டம் உப்பத்தூர் வழியாக நாருகாபுரத்திற்கு அரசு பஸ் செல்வது வழக்கம். நேற்று இரவு அண்ணா பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண் டிருந்த அரசு பஸ்ஸில் உப் பத்தூருக்கு செல்லும் பயணிகள் வழக்கம் போல ஏறி உட்கார்ந்திருந்தனர். அப்போது பஸ்சில் ஏறிய டிரைவர், பஸ்சில் உட் கார்ந்திருந்த பயணிகளி டம், இந்த பஸ் இன் றைக்கு உப்பத்தூருக்கு செல்லாது என கூறிய தோடு, அவர்களை பஸ் சில் இருந்து இறங்கும்படி […]
கோவில்பட்டி ஜோதி நகர் 1-வது தெருவை சேர்ந்த புதியவன் என்பவரின் மகன் காளிராஜ் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் மகளிர் குழு கடன் தொகை வசூலிக்கும் வேலை செய்து வந்தார். இன்று மதிய நேரத்தில் இவர் மோட்டார் சைக்கிளில் புது ரோடு இறக்கத்திலிருந்து மருத்துவமனை நோக்கி வந்து கொண்டிருந்தார். வழக்கமாக இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வழக்கம். மேலும் அந்தப் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே சாலையை விதிகளை […]
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று சிகிச்சை பலனின்றி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். பாரதிராஜாவின் திடீர் உயிரிழப்பு தமிழ் சினிமாவை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவருக்கு ரசிகர்களும், திரைப்பிரலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து […]
வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜா, இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 85. தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் பாரதிராஜா உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. சினிமா பிரபலங்கள் . அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் , நேரில் வந்து பாரதிராஜா உடலுக்கு மலர் மாலை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.அப்போது அங்கு […]
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் உள்ள சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதியில் தங்கி, கடந்த கல்வியாண்டில் மாணவி ஒருவர் 11-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். நடப்பு கல்வியாண்டில் அவர் 12-ஆம் வகுப்பு படிப்பைத் தொடர வேண்டிய சூழலில், மீண்டும் அதே விடுதியில் தங்கிப் படிப்பதற்காக விண்ணப்பித்துள்ளார். ஆனால், விடுதி நிர்வாகம் தரப்பில் அந்த மாணவியைச் சேர்க்கக் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. “மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று உரிய அனுமதி பெற்று, அவரிடம் கையெழுத்து வாங்கி […]
நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ துறை சார்பில் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சமூக தணிக்கை மாவட்ட வள அலுவலர் சேகர் தலைமை தாங்கினார். சமுகதணிக்கை வட்டார வள பயிற்று நர்கள் செல்வகுமார், ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் […]
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” இன்று தொடங்கி வைக்கப்பட்டது. ஐஜி பவானீஸ்வரி தலைமையில் அதிநவீன கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை “Zero Tolerance” முறையில் ஒடுக்க களமிறங்குகிறது. சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், இதற்கான பிரத்தியேக வாகனங்கள் மற்றும் சைபர் பிரிவு செயல்பாடுகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு […]
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த மேலகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ராமலெட்சுமி (23). இவர் திருநெல்வேலியில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். ராமலெட்சுமியின் தம்பி முத்துக் கிருஷ்ணன் (20). இவர் ஒரு தனியார் உணவகத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக ராமலெட்சுமி வாலிபர் ஒருவரைத் தீவிரமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் தொடர்பாக அவர்களது குடும்பத்தில் கடுமையான கருத்து வேறுபாடுகளும் குடும்பத் தகராறும் ஏற்பட்டு […]







