மறைந்த இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் விஜய் கண்ணீர் அஞ்சலி ; முழு அரசு மரியாதைக்கு உத்தரவு
Oplus_16908288


வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜா, இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 85.
தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் பாரதிராஜா உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. சினிமா பிரபலங்கள் . அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் , நேரில் வந்து பாரதிராஜா உடலுக்கு மலர் மாலை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.அப்போது அங்கு இசை அமைப்பாளர் கங்கை அமரன்,. நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை ராதிகா ஆகியோர் இருந்தனர், பாரதிராஜா குடும்பத்தின்ருக்கு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் ஆறுதல் கூறினார்,.

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
”தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையும் துயரமும் அடைந்தேன்.
கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கு என தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பாரதிராஜா. தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர்.
பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
இயக்குநர் இமயம் பாரதி ராஜாவின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் கூறியுள்ளார்







