பள்ளி வாகனம் மோதி ஒருவர் சாவு
Oplus_16908288
கோவில்பட்டி அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் ராதாகிருஷ்ணன் (48). இவர் முடுக்கு மீண்டான் பட்டியில் வசித்து வரும் இவர் இன்று பைக்கில் கோவில்பட்டியில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

சாலைப்புதூர் அருகேஅணுகு சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் பள்ளி வாகனம் மோதியது.
விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் அவரது உடலை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசா ர் கைப்பற்றி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் வழக்கு பதிவு செய்து பள்ளிக்கூடம் பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.







