இயற்கை மருத்துவம், யோகா விழிப்புணர்வு முகாம்
நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ துறை சார்பில் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சமூக தணிக்கை மாவட்ட வள அலுவலர் சேகர் தலைமை தாங்கினார்.
சமுகதணிக்கை வட்டார வள பயிற்று நர்கள் செல்வகுமார், ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சமூக தணிக்கைவட்டார வள பயிற்றுனர் கணேசமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்
கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா மருத்துவர் திருமுருகன் கலந்து கொண்டு இயற்கை மருத்துவம் யோகா குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார்.
அனைவருக்கும் கண்னை சுத்தப்படுத்தும் குவளை,ஆவாரம்பூ பவுடர்,முருங்கை பவுடர் உள்ளிட்ட மூலிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
.

மாவட்டத்தின் வட்டார அளவில் பணிபுரியும் சமூகத் தணிக்கை வட்டார வள பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் சமூக தணிக்கை வட்டார வள பயிற்றுநர் முத்து முருகன் நன்றி கூறினார்.







