தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக துவங்கப்படும் பட்டாசு ஆலைகளுக்கு கந்தக உரிமம் வழங்காமல் காலம் தாழ்த்தப்படுவதை கண்டித்தும், 50-க்கும் மேற்பட்ட புதிய பட்டாசு ஆலைகளுக்கு தடையில்லா சான்று வழங்காமல் முட்டுக்கட்டை போடுவதைக் கண்டித்தும் (ஜூன் 16-ம் தேதி) தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு அறப்போராட்டம் நடத்தப்படும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் சங்கத் தலைவர் ரகுராம் கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது; கடந்த 2 ஆண்டுகளாக கோவில்பட்டி, […]
கோவில்பட்டி அருகே வில்லிச்சேரி கிராமத்தைச்சேர்ந்த பவுன் ராஜ் என்பவர் துபாய்க்கு எலக்ட்ரிசியன் வேலைக்கு சென்ற இடத்தில் போதிய ஊதி யம் கிடைக்காமல் பிரச் சனை ஏற்பட்டு சிக்கி தவித்துக் கொண்டிருந் தார். இது குறித்த தகவல் கிடைத்ததும் மதிமுக முதன்மைச் செயலாள ரும், திருச்சிநாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ முயற்சியினால் அவர் சொந்தஊர் திரும்பினார். இந்நிலையில் நேற்று மாலை துரை வைகோ எம்பி வில்லிச்சேரி கிரா மத்திற்கு நேரில் சென்று பொன்ராஜ் குடும்பத்தை சந்தித்து உரையாடினார். அவரு […]
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பாக கோவில்பட்டி வட்டாரப் புதிய நிர்வாகிகள் தேர்தல், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணையராக சுந்தர் சிங் மற்றும் துணைத் தேர்தல் ஆணையராக ராபர்ட் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். சங்க விதிகளுக்கு உட்பட்டு முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் முத்தையா மற்றும் மாவட்டப் பொருளாளர் கன்னையா ஆகியோர் கலந்துகொண்டு, […]
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்; ஒரே நாளில் 3,125 வழக்குகளில் சுமுக தீர்ப்பு
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர் (பொறுப்பு) எம். தாண்டவன் தலைமையில் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. பொதுமக்களின் நீண்டகால வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆக மொத்தம் 13 அமர்வுகள் (Benches) அமைக்கப்பட்டிருந்தன. இதன்படி தூத்துக்குடியில் 4 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 […]
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு, மலேசியாவிலிருந்து போலி ஆவணங்கள் மூலமாகத் திட்டமிட்டு கடத்தி வரப்பட்ட சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 5 டன் கசகசா மூட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு (DRI) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனத்தின் முகவரிக்கு, மலேசியாவிலிருந்து தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு 40 அடி நீளமுள்ள சரக்குப் பெட்டகம் (Container) ஒன்று வந்திறங்கியது. இந்தச் சரக்குப் பெட்டகத்தின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், […]
தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களின் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்த நவீன் பாண்டியன், நிர்வாகக் காரணங்களுக்காகத் தென்காசி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த கருப்பண்ண ராஜவேல், தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இரண்டு அதிகாரிகளும் இன்னும் ஒரு […]
கோவில்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மூத்த விவசாயி ரங்கசாமி தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க தலைவர்கள் பிரேம்குமார், சொரிமுத்து, வென்னிமலை , சரவணன், ஆதிமூலம், சீனிவாசன், ரெங்குதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்புச் செயலாளர் நேதாஜி, விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 22 ஆம் தேதி நடைபெறும் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினார். தொடர்ந்து, சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி விவசாயிகளின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இக்கூட்டத்தில் […]
இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா கடந்த 10-ஆம் தேதி வயோதிகம் மற்றும உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். சென்னை நீலாங்கரையில் வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவி்ன் உடலுக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவரகளும், திரைப் பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. பாரதிராஜாவின் மறைவுக்கு பலரும் தங்களின் […]
ரஜினிகாந்த் பெயரையோ புகைப்படத்தையோ எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது; ரசிகர் மன்றம் அறிவிப்பு
அண்ணாமலை, ராகவ லாரன்ஸ் ஆகியோருக்கு ரஜினி ஆதரவு என வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில்,” கூறி இருப்பதாவது:- நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஒரு என பெயரையோ அல்லது புகைப்படத்தையோ எந்த கட்சிக்கோ, அமைப்பிற்கோ பயன்படுத்தகூடாது. தலைவரின் உத்தரவுப்படி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
.நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் போலி அடையாள அட்டைகளுடன் அதிகாரி போல் வலம் வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார் இது பற்றிய விவரம் வருமாறு:- நெல்லை மாவட்டம், கூந்தங்குளம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(38). இவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தேசிய சுகாதார நல்வாழ்வு குழுமத்தின் தற்காலிக சுகாதார பணியிடத்திற்கான நேர்காணலில் பங்கேற்பதற்காக வந்திருப்பதாக தெரிவித்தார். அவரது இரு சக்கர வாகனத்தில் போலீஸ் என எழுதப்பட்டிருந்தது. மேலும் அவர் காக்கி பேண்ட், போலீஸ் பெல்ட் அணிந்திருந்தார். கையில் இருந்த பைலை வைத்துக் […]







