தூத்துக்குடி மாவட்ட பி.ஆ.ர்ஓ.வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்
தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களின் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்த நவீன் பாண்டியன், நிர்வாகக் காரணங்களுக்காகத் தென்காசி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த கருப்பண்ண ராஜவேல், தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இரண்டு அதிகாரிகளும் இன்னும் ஒரு சில தினங்களில் தங்களின் புதிய மாவட்ட அலுவலகங்களில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகளாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.







