தவெக அரசுக்கு 6 மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும்;துரை வைகோ பேட்டி
Oplus_16908288
கோவில்பட்டி அருகே வில்லிச்சேரி கிராமத்தைச்சேர்ந்த பவுன் ராஜ் என்பவர் துபாய்க்கு எலக்ட்ரிசியன் வேலைக்கு சென்ற இடத்தில் போதிய ஊதி யம் கிடைக்காமல் பிரச் சனை ஏற்பட்டு சிக்கி தவித்துக் கொண்டிருந் தார்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் மதிமுக முதன்மைச் செயலாள ரும், திருச்சிநாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ முயற்சியினால் அவர் சொந்தஊர் திரும்பினார்.
இந்நிலையில் நேற்று மாலை துரை வைகோ எம்பி வில்லிச்சேரி கிரா மத்திற்கு நேரில் சென்று பொன்ராஜ் குடும்பத்தை சந்தித்து உரையாடினார்.

அவரு டன் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி விநாயகா ரமேஷ் ஆகி யோர் சென்றிருந்தனர்.
பின்னர் துரை வைகோ எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் காவல் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் அண்மையில்தான் நடந்துள்ளன அதே வேளையில், கடந்த ஆட்சியிலும் சமூக நீதி குற்றங்கள், போதை பொருள்கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். தற்போ தும் அது தொடர்சம்பவங் கள் நடைபெற்று வருகி றது. குறைந்தபட்சம் 6 மாதங்களாவது ஒரு அர சாங்கத்திற்கு காலகஅவ காசம் கொடுக்க வேண்டும். ஏற்கனவே பல பிரச்சினைகள் உள்ளன. போதை பொருள் கலாச்சா ரத்தை எல்லா இடங்களி லும் நாம் பார்க்கிறோம். அதனை கட்டுப்படுத்துவ தற்கான முயற்சியில் புதிய அரசு ஈடுபட்டுள்ளது.

பெண்களுக்கு எதி ரான குற்றங்களைத் தடுக்க சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் ‘சிங்கப் பெண்’ அதிரடிப்படை போன்ற பாதுகாப்பான சூழலை உருவாக்க அரசு அறிவித்துள்ளது. பிரச்ச னைகளை தீர்க்கக்கூடிய முயற்சிகளை அரசாங்கம் எடுத்துக் கொண்டிருக் கின்றனர். குறைந்தபட்சம் 6 மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு துரை வைகோ கூறினார்.







