கோவில்பட்டி வட்டார ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பாக கோவில்பட்டி வட்டாரப் புதிய நிர்வாகிகள் தேர்தல், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

தேர்தல் ஆணையராக சுந்தர் சிங் மற்றும் துணைத் தேர்தல் ஆணையராக ராபர்ட் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். சங்க விதிகளுக்கு உட்பட்டு முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் முத்தையா மற்றும் மாவட்டப் பொருளாளர் கன்னையா ஆகியோர் கலந்துகொண்டு, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கடமைகளை விரிவாக எடுத்துக்கூறி வாழ்த்திப் பேசினர். முன்னதாகச் செயலாளர் சுதாகர் அனைவரையும் வரவேற்றார். நிறைவாகக் கோவில்பட்டி வட்டாரப் பொருளாளர் பொன்ராஜ் நன்றி கூறினார்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் கோவில்பட்டி வட்டாரத் தலைவராக அ. சிந்தா மதார் பக்கீர், செயலாளராகச் செ. சுதாகர், பொருளாளராக இரா. பொன்ராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
துணைத் தலைவர்களாக டி. பாக்கியமுத்து, கே. செல்லச்சாமி, டி. மரியாள் ஆகியோரும், இணைச் செயலாளர்களாக ஜி. சுரேஷ் குமார், ஆர். ஆப்ரகாம் டேவிட், வி.எஸ். சந்திரா ஆகியோரும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்களாக எஸ். மாணிக்கம், சி. மாரிமுத்து, பி. மல்லிகா , வட்டாரச் செயற்குழு உறுப்பினர்களாக ஸ்ரீதேவி, பி. குருவம்மாள், எஸ். தனலட்சுமி, வி. குமுதவள்ளி, ஆர். ஜீனத் பானு, எஸ்.ஆர். சாஹினா, ஏ. நீலமேகம், எம். இரவிச்சந்திரன், ஆர். இராஜேந்திரன், எஸ். மோகன் ராஜ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பாராட்டப்பட்டனர்.







