,ரோட்டரி பதவிக்கால கடமைகளை தாண்டி சமூகத்திற்கு செய்யும் தொடர்ச்சியான சேவைக்கும்,மனிதநேய பணிகளில் சிறந்து விளங்கும் உறுப்பினர்களுக்கு சர்வதேச ரோட்டரி இயக்குனர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு தன்னலமற்ற சேவை விருது வழங்கப்படுகிறது, ஒவ்வொரு ஆண்டும்,ரோட்டரி மாவட்டத்தில் ஒருவர் வீதம் உலக அளவில்மொத்தம் 150 பேர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது இந்த ஆண்டு விருது பெற்றவர்களில் திருநெல்வேலி சென்ட்ரல் ரோட்டரி கிளப்பை சேர்ந்த ரோட்டரி மாவட்ட ஆலோசகர் மயில் பாலசுப்பிரமணியன் ஒருவர் ஆவார். இதையொட்டி மயில் பாலசுப்பிரமணியனுக்கு கோவில்பட்டியில் நடந்த பாராட்டு […]
2025-26ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31 சதவீத மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 9 லட்சம் பேர் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,21,105 (94.31 சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைபோலவே . இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.15 சதவீதம் மாணவர்கள் […]
சென்னையில் கடந்த 2013 இல் சொத்து தகராறில், நரம்பியல் டாக்டர் சுப்பையா, கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், சுப்பையாவின் உறவினரான பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், போரிஸ், பேசிலின் நண்பர்கள் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, […]
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் சென்னையில் இன்று எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார். uஅ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் எடப்பாடி ஆதரவு மாவட்ட செயலாளர் மற்றும் கலந்து கொண்டனர். அதிருப்தி அணியில் உள்ள முன்னணி நிர்வாகிகள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 47 பேரில் மூன்றில் 2 பங்கு எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக செயல்பட்டால் மட்டுமே சட்டசபையில் அவர்களுக்கு தனி […]
கோவில்பட்டி புதுக்கிராமம் நாராயணகுரு தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது 4வயது மகள் கொசிகா நேற்று காலை அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு நாய் சிறுமியை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதை கண்டு சிறுமி கொசிகா பயந்து போய் ஓட்டம்பிடித்தாள்.ஆனால் அந்த நாய் விடாமல் துரத்தி சென்றது, அந்த சமயத்தில் வேறு சில நாய்களும் ஓடி வந்து கொசிகாவை சூழ்ந்துகொன்டன, வந்த ஒரு நாய் அந்த சிறுமியை துரத்த, அவறியடித்துக் கொண்டு அவள் […]
கோவில்பட்டி பசும்பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 70).தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரிவர காது கேட்காது என்று கூறப்படுகிறது. சென்னையில் சிகிச்சை பெற்று வரும் தனது பேரனை பார்ப்பதற்காக அருளானந்தம், அவரது மனைவி அமராவதி மற்றும் பேரன் அர்ஜுனன் (9) ஆகியோர் ரெயில் மூலம் சென்னை செல்வதற்காக கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.. 2வது நடைமேடைக்கு செல்வதற்காக ரெயில்வே தண்டவாளத்தை கடந்த போது செங்கோட்டையில் இருந்து சென்னை […]
கோவில்பட்டி பாரதி நகர சேர்ந்த அய்யாசாமி என்பவர் மகன் சண்முகம். இவர் கோவில்பட்டி சாஸ்திரி நகர் பகுதியில் நர்மதா இண்டஸ்ட்ரி என்ற பெயரில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். நேற்று இரவு அந்த ஆலையின் குச்சி குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்து புகை அதிகமாக வெளிவர தொடங்கியது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் […]
அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர் தோல்விகளை அதிமுக சந்தித்து வருகிறது. அதிமுகவின் வாக்கு வங்கி தொடர்ந்து சரிந்து வருகிறது. தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டும். நீக்கப்பட்டவர்களை இணைத்து அதிமுகவை வலிமைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினோம். அதிமுக இணைப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்தார். வலிமையான கூட்டணி அமைக்கப்படாததால் தோல்வி அடைந்துள்ளோம். சட்டசபை தேர்தலில் தவெகவுடன் கூட்டணி வைக்க நாங்கள் […]
கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கிப்போட்டி நடக்க இருக்கிறது. இது குறித்து கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் இயக்குநர் எஸ்.சண்முகவேல் தமது வெளியிட்டுள்ள செய்திக்குறிபில் கூறி இருப்பதாவது:- இலட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 15வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் வருகின்ற 21ந் தேதி முதல் 30 ந் தேதி வரை கோவில் பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் அகில இந்திய அளவில் சிறந்து விளங்கும் 16 ஆக்கி அணிகள் பங்கேற்கின்றன. அதாவது நியூ டெல்லி […]
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள உள்ள அம்மணம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 42). டிரைவர் இவருடைய மகன் லோகேஷின் நண்பர்கள் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பரத்குமார் (22), சீனிவாசன் (23). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் லோகேஷின் வீட்டில் தங்கியிருந்தபோது 6 பேர் மோட்டார் சைக்கி ளில் வந்து சரமாரியாக சீனிவாசன் மற்றும் பரத்குமாரை வெட்டிக்கொலை செய்து விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக […]







