தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து; 40 குச்சி மூட்டைகள் எரிந்து சேதம்
கோவில்பட்டி பாரதி நகர சேர்ந்த அய்யாசாமி என்பவர் மகன் சண்முகம். இவர் கோவில்பட்டி சாஸ்திரி நகர் பகுதியில் நர்மதா இண்டஸ்ட்ரி என்ற பெயரில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு அந்த ஆலையின் குச்சி குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்து புகை அதிகமாக வெளிவர தொடங்கியது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இருந்த போதிலும் குடோனில் இருந்த 40 மூட்டை குச்சிகள் முற்றிலுமாக எரிந்து சேதமானது.

தீப்பெட்டி ஆலையில் இரவு நேரம் ஊழியர்கள் யாரும் இல்லை என்பதால் நல்லவேளையாக எந்தவித உயிர்ச்சேதமும் இல்லை.
தீ விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







