கோவில்பட்டி புதுக்கிராமத்தில் 4 வயது சிறுமியை கடித்து குதறிய நாய்கள்
கோவில்பட்டி புதுக்கிராமம் நாராயணகுரு தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது 4வயது மகள் கொசிகா நேற்று காலை அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது ஒரு நாய் சிறுமியை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதை கண்டு சிறுமி கொசிகா பயந்து போய் ஓட்டம்பிடித்தாள்.
ஆனால் அந்த நாய் விடாமல் துரத்தி சென்றது, அந்த சமயத்தில் வேறு சில நாய்களும் ஓடி வந்து கொசிகாவை சூழ்ந்துகொன்டன, வந்த ஒரு நாய் அந்த சிறுமியை துரத்த, அவறியடித்துக் கொண்டு அவள் ஓட. மேலும் சில நாய்கள் அந்த சிறுமியை சுற்றி வளைத்து கடித்தன . இதில கால் கைககளில் காயங்களுடன் தப்பினாள்
கொசிகாவை சிலர் காப்பாற்றினார்கள்.’அவர்கள் நாய்களை துரத்தி அடித்தனர்,. இதனால் சிறுமி கொசிகா உயிர் தப்பினாள். பின்னர் அந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே. சிறுமி கொசிகாவை நாய்கள் தூரத்தி, கடிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி,பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கிராமம் பகுதியில் 25க்கும் மேற்பட்ட நாய்கள் தெருத்தெருவாக சுற்றி வருகின்றன, அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்வோரை குறி வைத்து கடிப்பதால் அந்த பகுதியினர் பீடியில் உள்ளனர்.

தெருவில் நடந்து செல்லும் பொதுமக்கள் சிறுவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்திச் சென்று கடிக்கும் களை அங்கிருந்து அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







