அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய ஆலோசனை



அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் சென்னையில் இன்று எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
uஅ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் எடப்பாடி ஆதரவு மாவட்ட செயலாளர் மற்றும் கலந்து கொண்டனர்.

அதிருப்தி அணியில் உள்ள முன்னணி நிர்வாகிகள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 47 பேரில் மூன்றில் 2 பங்கு எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக செயல்பட்டால் மட்டுமே சட்டசபையில் அவர்களுக்கு தனி அணி அங்கீகாரம் கிடைக்கும். அதன்படி பார்த்தால் எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு 32 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.ஆனால் 25 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்து உள்ளதால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சபாநாயகரால் தனி அணியாக அறிவிக்க முடியாது.
அதே நேரத்தில் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 25 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக சபாநாயகரிடம் முறைப்படி மனு அளித்தும் எந்தநடவடிக்கையும் எடுக்கப்படாததால் அடுத்த கட்டமாக 25 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதும் மேற்கொள்ளப்பட வேண்டியநடவடிக்கைகள் பற்றியும் இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
…







