கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கிப்போட்டி; 21 -ந்தேதி தொடக்கம்
பைல் போட்டோ
கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கிப்போட்டி நடக்க இருக்கிறது. இது குறித்து கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் இயக்குநர் எஸ்.சண்முகவேல் தமது வெளியிட்டுள்ள செய்திக்குறிபில் கூறி இருப்பதாவது:-
இலட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 15வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் வருகின்ற 21ந் தேதி முதல் 30 ந் தேதி வரை கோவில் பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் அகில இந்திய அளவில் சிறந்து விளங்கும் 16 ஆக்கி அணிகள் பங்கேற்கின்றன. அதாவது நியூ டெல்லி இந்தியன் ஏர் ஃபோர்ஸ், மும்பை இந்தியன் நேவி, செகந்தராபாத் சவுத்சென்ட்ரல் ரெயில்வே, ஜலந்தர் ஆர்மி கிரீன், நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா, ஜலந்தர் பஞ்சாப் & சிந்து வங்கி மற்றும் கோவில்பட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன.
இப்போட்டி களின் துவக்க விழா மே 21ஆம் தேதிமாலை 5 மணிக்கு நடைபெறும். இப்போட்டிகள் கால் இறுதிக்கு முந்தைய ஆட்டங்கள்வரைலீக் முறையிலும், கால் இறுதி, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக்அவுட் முறையிலும் நடைபெறும்.
தினமும் காலை 7. மணி, மாலை 5.15 மணி, 6.45 மணிமற்றும் இரவு 8.15 மணி ஆகிய நேரங்களில் நான்கு போட்டிகளாக நடைபெ றும். இந்தியாவின் பல் வேறு மாநிலங்களைச் சேர்ந்த தேசிய மற்றும் சர்வ தேச தரம் வாய்ந்த நடுவர் கள்இதில்கலந்துகொண்டு, போட்டிகளை சிறப்பாக நடத்த உள்ளனர்.
இந்த போட்டியில் சாம்பி யன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூ. 1 லட்சம் மற்றும் மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள் ளது. முதல் மூன்று அணிகளுக்கு ரொக்கப் பரி சுடன் இலட்சுமி அம்மாள் நினைவு கோப்பையும், நான்காவது இடம் பெறும் அணிக்கு நினைவு கோப் பை வழங்கப்படும்.
நடுவர்களால் தேர்வு செய்யப்படும் சிறந்த கோல் கீப்பர், சிறந்த தற்காப்பு வீரர், சிறந்த நடுகள வீரர், சிறந்த முன்வரிசை வீரர், சிறந்த வளர்ந்து வரும் வீரர் மற்றும் போட்டியின் சிறந்த வீரர்ஆகியோருக்கும்தனிப் பட்ட விருதுகள் வழங்கப்ப டும்.

பங்கேற்கும் அணிகளின் வீரர்களுக்கான போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் இப்போட்டிகளை கட்டணமின்றி நேரில் கண்டு ரசிக்கலாம் .
இவ்வாறு அவர் கூறினார்,.







