சர்வதேச ரோட்டரியின் விருது பெற்றவருக்கு கோவில்பட்டியில் பாராட்டு
,ரோட்டரி பதவிக்கால கடமைகளை தாண்டி சமூகத்திற்கு செய்யும் தொடர்ச்சியான சேவைக்கும்,மனிதநேய பணிகளில் சிறந்து விளங்கும் உறுப்பினர்களுக்கு சர்வதேச ரோட்டரி இயக்குனர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு தன்னலமற்ற சேவை விருது வழங்கப்படுகிறது,

ஒவ்வொரு ஆண்டும்,ரோட்டரி மாவட்டத்தில் ஒருவர் வீதம் உலக அளவில்மொத்தம் 150 பேர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது இந்த ஆண்டு விருது பெற்றவர்களில் திருநெல்வேலி சென்ட்ரல் ரோட்டரி கிளப்பை சேர்ந்த ரோட்டரி மாவட்ட ஆலோசகர் மயில் பாலசுப்பிரமணியன் ஒருவர் ஆவார்.
இதையொட்டி மயில் பாலசுப்பிரமணியனுக்கு கோவில்பட்டியில் நடந்த பாராட்டு விழா நடத்தப்பட்டது, ரோட்டரி சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.. ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன், கிளப் லீடர்சிப் லேர்னிங் செமினார் சேர்மன் கற்போர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விருது பெற்ற மயில் பாலசுப்ரமணியனுக்கு ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். மயில் பாலசுப்பிரமணியன் ஏற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள்,சீனிவாசன், வி.எஸ்.பாபு, முத்துச் செல்வம், நாராயணசாமி,ஆசியாபார்ம்ஸ் பாபு, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சங்கத் துணைத் தலைவர் முத்து முருகன் நன்றி கூறினார்







