புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பா.ஜனதா 4 தொகுதிகளிலும், அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கூட்டணி தலைவராக ரங்கசாமி தேர்வு செய்து, ஆதரவு கடிதம் வழங்கினர். இதையடுத்து அவர் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த நிலையில் ஆட்சி அமைக்க வருமாறு […]
மத்திய கிழக்கில் நிலவி வரும் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை விரைவில் உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் இறக்குமதிக்கா இந்தியா அந்நிய செலவாணி செலவிடும் அளவு அதிகரித்து வருகிறது. இதனால், நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், […]
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் நேற்று (12.05.2026) வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போல்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தார்கள். அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையின் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் (52) என்பவர் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரி முத்துராஜை கைது […]
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (56) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி […]
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு, சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு என 2 தரப்பாக பிளவு பட்டுள்ளது. இதில் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி…. வேலுமணி தரப்பில் 30 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் அலுவலகத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் இன்று சென்றார்.. அவரை சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்பட பல்வேறு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நேரில் சென்று வரவேற்றனர்…. இதையடுத்து முதல்-அமைச்சர் விஜய்யை […]
தவெகவுக்கு ஆதரவாக பேசிய எம்.எல்.ஏ. காமராஜ், அ.ம.மு.க.வில் இருந்து நீக்கம்; டி.டி.வி. தினகரன்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியமைத்து உள்ளது. முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்று உள்ளார். இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கவர்னரை நேரில் சந்தித்து, எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்க ஆதரவளிக்கிறேன் என கூறினார். […]
கோவில்பட்டியில் சர்வதேச செவிலியர் தின விழா; அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற உறுதிமொழி ஏற்பு
நவீன செவிலியத்தொழிலின் முன்னோடியான கை விளக்கு ஏந்திய காரிகை பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான மே-12ம் தேதியை உலக செவிலியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடந்த செவிலியர் தின விழாவில் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மருத்துவமனை செவிலியர்கள் தனது வாழ்நாளை தூய்மையுடன் கழிக்கவும்,செவிலியத் தொழிலை உண்மையுடன், அர்ப்பணிப்புடனும், விசுவாசத்துடன் செய்திடவும், மருத்துவப் பணியில் மருத்துவருக்கு உதவி […]
தமிழ்நாட்டில் 4,829 ‘டாஸ்மாக்’ மதுகடைகள் இயங்கி வருகின்றன. மாதம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் துறையாக ‘டாஸ்மாக்’ இருக்கிறது. ஆனால் மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதால், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் […]
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும் குற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் காவல்துறை சார்பாக புதிதாக CCTV கேமராக்கள் மற்றும் பேருந்து நிலையத்தின் உள் மற்றும் வெளிப்புறத்தில்பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் PA System எனப்படும் ஒலிபெருக்கி அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது. அதன்படி பஸ் நிலைய வளாகத்திற்குள் பயணிகள் காத்திருக்கும் பகுதி பேருந்தில் ஏறும் இறங்கும் பகுதி உட்பட அனைத்து பகுதிகளையும் […]
கோவில்பட்டியில் அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளை சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா, பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா, உழைப்பாளர்கள் தின விழா ஆகிய முப்பெரும் விழா கி.ரா.நினைவரங்கத்தில் நடந்தது. முப்பெரும் விழாவிற்கு கோவில்பட்டி அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளை நிறுவனரும், மூத்த தமிழறிஞருமான திருமலை முத்துச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் பாஸ்கரன் உழைப்பாளர்கள் குறித்து சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் டாக்டர் அம்பேத்கர் குறித்து பேசினார். ஆசிரியர் ஜான் கணேஷ் தலைமையில் நாடும் வீடும் […]







