கோவில்பட்டியில் சர்வதேச செவிலியர் தின விழா; அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற உறுதிமொழி ஏற்பு
நவீன செவிலியத்தொழிலின் முன்னோடியான கை விளக்கு ஏந்திய காரிகை பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான மே-12ம் தேதியை உலக செவிலியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடந்த செவிலியர் தின விழாவில் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மருத்துவமனை செவிலியர்கள் தனது வாழ்நாளை தூய்மையுடன் கழிக்கவும்,செவிலியத் தொழிலை உண்மையுடன், அர்ப்பணிப்புடனும், விசுவாசத்துடன் செய்திடவும், மருத்துவப் பணியில் மருத்துவருக்கு உதவி செய்யவும், செவிலியத் தொழிலின் தரத்தை பேணவும் உயர்த்தவும் இயன்ற முயற்சிகளை செய்திட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவர் சுதா தலைமை தாங்கினார்
ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் பாபு, சீனிவாசன், முத்துச் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவமனை நர்சிங் மேற்பார்வையாளர் லட்சுமி காந்தம் அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் கலந்துகொண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் திருவுருவ படத்திற்கு மலர் தூவி செவிலியர்களுக்கு ரோஜாப்பூ மற்றும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் படம் வழங்கி வாழ்த்தி பேசினார்.

மருத்துவமனை நர்சிங் மேற்பார்வையாளர்கள் ஜானகி, மீனா,ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவி மாணிக்கம், முத்து முருகன், கருப்பசாமி, மாரியப்பன், பிரபாகரன், மணிகண்டன், குமார் உள்பட மருத்துவமனை செவிலியர்கள், தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மருத்துவமனை நர்சிங் பேற்பார்வையாளர் தமிழ்செல்வி நன்றி கூறினார்.







