பெட்டிக்கடையில், 7 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் நேற்று (12.05.2026) வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போல்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்தார்கள்.

அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையின் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் (52) என்பவர் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரி முத்துராஜை கைது செய்து அவரிடமிருந்த 7 கிலோ 125 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரூ 27,000/- ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து புகையிலை பொருட்கள் விற்பனையில் பின்னால் இருப்பவர்கள் யார்என்பது பற்றிவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







