போக்சோ வழக்கில் கைதானவர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பு
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (56) என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி எதிரியை நேற்று (12.05.2026) கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.








