நாடும் வீடும் வளர்ச்சி பெற காரணம் உழைப்பே… பணமே… பட்டிமன்றம்

கோவில்பட்டியில் அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளை சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா, பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா, உழைப்பாளர்கள் தின விழா ஆகிய முப்பெரும் விழா கி.ரா.நினைவரங்கத்தில் நடந்தது.

முப்பெரும் விழாவிற்கு கோவில்பட்டி அறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளை நிறுவனரும்,
மூத்த தமிழறிஞருமான திருமலை முத்துச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் பாஸ்கரன் உழைப்பாளர்கள் குறித்து சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் டாக்டர் அம்பேத்கர் குறித்து பேசினார்.
ஆசிரியர் ஜான் கணேஷ் தலைமையில் நாடும் வீடும் வளர்ச்சி பெற காரணம் உழைப்பே… பணமே… என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.
பேச்சாளர்களாக தேசிய நல்லாசிரியர் விநாயகசுந்தரி, வானொலிப்புகழ் சுப்புலட்சுமி,
முனைவர்கள் முருகசரஸ்வதி, செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் பாஸ்கரன், தலைமை ஆசிரியர்கள் நம்.சீனிவாசன், ஜெயலதா,மணிமதி ஆகியோரை கவுரவித்து, நினைவு பரிசு வழங்கினர். விழாவில், திரளானோர் கலந்து கொண்டனர்.








