வைகோ, அன்புமணியை சந்தித்த முதல்-அமைச்சர் விஜய்

தமிழக முதல்-அமைச்சர் விஜய் அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடாக, மரியாதை நிமித்தமாக எதிர்க்கட்சி தலைவர்களை அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்த வகையில் திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முதல்-அமைச்சர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பிறகு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்தார். அண்ணா நகரில் உள்ள வைகோ வீட்டிற்கு சென்ற விஜய்யை, வாசலுக்கே வந்து துரை வைகோ வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். வீட்டிற்கு வந்த விஜய்யை பொன்னாடை போர்த்தி வைகோ வரவேற்றார். குடும்ப உறுப்பினர்களாய் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் வீட்டில் இருந்த பணியாளர்களை அழைத்து இவர்கள் விசிலுக்கு வாக்களித்தவர்கள் என்று குறிப்பிட்டார், அவர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்தார்,. பின்னர் வைகோவுடன் சிறிது நேரம் விஜய் பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு, கார் வரை வந்து விஜய்யை வைகோ வழியனுப்பி வைத்தார்
தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் தற்போது நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு நேரில் சென்றார்.. முதல்-அமைச்சர் விஜய்யை அன்புமணி ராமதாசும், அவரது மனைவி சவுமியா அன்புமணியும் வாசலுக்கே நேரில் சென்று வரவேற்றனர்.
பின்னர், அன்புமணி ராமதாசிடம் முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து பெற்றார். பின்னர், அன்புமணி ராமதாஸ் குடும்ப உறுப்பினர்கள் முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.








