• October 21, 2026

Month: February 2026

கோவில்பட்டி

ஜி. வி. என். கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 

கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (ஜி. வி. என்.)யில் கல்லூரியில் ‘பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இயற்பியல் துறைத்தலைவரும் மகளிர்க்கழக ஒருங்கிணைப்பாளருமான பெ.சித்ரலேகா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர்  மூ.சுப்புலெட்சுமி  தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாகதூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  க.க.நிவேதிதா, தூத்துகுடி மாவட்ட நிதிக்கல்வி அறிவு வல்லுநர்  சா.ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். இருவருக்கும் கல்லூரி முதல்வர்  மூ.சுப்புலெட்சுமி  பொன்னாடை போர்த்தி கௌவரவித்தார்.  சிறப்பு விருந்தினர் தூத்துக்குடி மாவட்ட […]

கோவில்பட்டி

மாரத்தான் போட்டியில் நகராட்சி பள்ளி மாணவிகள் சாதனை 

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் கோவில்பட்டி வட்டார அளவிலான 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவிகளுக்கான  மாரத்தான் போட்டி நடைபெற்றது இப்போட்டியில் காந்திநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவிகள் முதல் மூன்று இடங்களை பெற்று  சாதனை படைத்தனர்.  7ம் வகுப்பு  மாணவி முனீஸ்வரி முதலிடம்,  8ம் வகுப்பு மாணவி முருகலட்சுமி இரண்டாமிடம்,7ம் வகுப்பு மாணவி ரத்தினப்பிரியா மூன்றாமிடம் பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு விருந்தினர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி (தூத்துக்குடி மாவட்ட  ஆக்கி கழகம் […]

கோவில்பட்டி

திமுக ஸ்டாலின் மகளிர் படை யினர் வாக்கு சேகரிப்பு 

கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக ஸ்டாலின் மகளிர் படை லிங்கம்பட்டி கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் வாக்கு சேகரித்தனர். மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், வழக்கறிஞர் ராமச்சந்திரன்,மாவட்ட பிரதிநிதி தங்கச்சாமி, கிளைச் செயலாளர் சேவியர் லாரன்ஸ்,கிளை பிரதிநிதி மைக்கேல் சாமிநாதன்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்

கோவில்பட்டி

கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் கருத்தரங்கு 

 கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்வி நிறுவனத்தில் “அறிவால் ஆளுமை கொள்” என்ற தலைப்பில் கருத்தரங்கு  நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனத்தின் தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை தாங்கினார்.. லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் ஆட்டோமொபைல் துறை முதுநிலை பேராசிரியர் குமாரமுருகன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக துபாய் எம்.என்.சி., ஆலோசகரும், சர்வீஸ் டூ தி சொசைட்டி நிறுவனருமான ரவி சொக்கலிங்கம் கலந்து கொண்டார். அவரை மாணவி திவ்யா நர்த்தினி அறிமுகப்படுத்தினார். துபாய் எம்.என்.சி., ஆலோசகர் ரவி சொக்கலிங்கம் […]

செய்திகள்

வேலூர் கூட்டத்தில் விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள்

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி நிர்வாகிகளின் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.  கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அங்கிருந்தவர்களிடம் முரட்டு ஜல்லிக்கட்டு காளை பற்றி குட்டிக் கதை ஒன்றை கூறிய விஜய், ‘சிறியவன், அனுபவம் இல்லாதவன் என்று எதுவுமே கிடையாது. பிரச்சினையை எப்படி தீர்க்கிறோம் என்பதுதான் முக்கியம்’ என்றார். மேலும், தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று குற்றம்சாட்டிய விஜய், சட்டம்-ஒழுங்கு காணாமல் போய் […]

கோவில்பட்டி

மக்காச்சோளத்திற்கு உரிய விலை கேட்டு கோவில்பட்டியில் முற்றுகை போராட்டம்

கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தை தேசிய விவசாயிகள் சங்கம் சார்பாக மக்காச்சோளத்திற்கு உரிய விலை கேட்டு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது, தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார்,  அய்யலுசாமி (வழக்கறிஞர்) முன்னிலை வகித்தார்.இந்த முற்றுகை போராட்டத்தில் சமூக ஆர்வலரும் தொழில் அதிபரும் ஆன ராஜேஷ் கண்ணன் , வில்லிசேரி முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் காசிராஜன்,ஆடு வளர்ப்போர் சங்க மாநில தலைவர் கருப்பசாமி, இயற்கை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கருப்பசாமி, ஒன்றிய தலைவர் […]

கோவில்பட்டி

சங்கரன்கோவில் புத்த கோபுரத்தின் ஓராண்டு நிறைவு விழா

சங்கரன்கோவில் அருகே மறைந்த முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்தையா 5 ஏக்கர் நிலத்தை புத்தர் கோவில் அமைக்க தானமாக வழங்கி உள்ளார இந்த இடத்தில் உலக அமைதிக்காக புத்த கோபுரம் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த புத்தமத துறவிகளால் கடந்த 25 ஆண்டுகளாக கட்டப்பட்டு கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த கோபுரத்தின்  ஓராண்டு நிறைவு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது . 120 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம்.மண்டபத்தில் சர்வதேச புத்த துறவிகள் பலர் […]

செய்திகள்

கடலுக்கு சென்று திரும்பாத மணப்பாடு மீனவர்கள் 10 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க

நாம் தமிழர் கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது  எக்ஸ் தள பக்கத்த்தில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கடந்த 5 நாட்களுக்கு முன் IND TN 12 MM 6865 என்ற எண்கொண்ட  விசைப்படகில்  மீன்பிடிப்புக்குச் சென்ற மணப்பாடைச் சேர்ந்த, மீனவர்கள் 10 பேர், 5 நாட்களுக்கு மேலாகியும் கரை திரும்பாதது  அவர்களின் குடும்பத்தினரிடமும், அப்பகுதி மீனவ மக்களிடமும்ம் பெரும் கவலையையும், அச்சத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன மீனவர்களை தேடித்தருமாறு தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட […]

செய்திகள்

8-வது ஊதியக் குழு பரிந்துரை: மத்திய அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அரியர் தொகை

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் கடந்த ஆண்டு (2025) டிசம்பர் மாதம் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தன. அதற்கு முன்னதாக, நவம்பர் 3-ந் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி, “8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட நாளில் இருந்து 18 மாதங்களுக்குள் அதன் பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பிக்கும்” என்று தெரிவித்தார். அதன் அடிப்படையில், 8-வது ஊதியக் குழுவுக்கு தலைவர் மற்றும் சில உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஊதியக் குழுவின் பரிந்துரை […]

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணி தேர்வு;

ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பாக சப் ஜூனியர் மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஆக்கி சாம்பியன் போட்டி- 2026 மாணவர்களுக்கான போட்டி ராமநாதபுரத்திலும் மாணவிகளுக்கான போட்டி சிவகங்கையில் பிப்ரவரி 28 முதல் மார்ச் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  இப்போட்டிகளில்  தூத்துக்குடி மாவட்ட அணி கலந்து கொண்டு விளையாட உள்ளது. சப் ஜூனியர் ஹாக்கி அணி  மாணவர்கள் மற்றும் மாணவிகள் இரு பிரிவினருக்கும் ஆன தேர்வு   26.2. 2026 (வியாழக்கிழமை) காலை 6:30 மணி […]