ஜி. வி. என். கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (ஜி. வி. என்.)யில் கல்லூரியில் ‘பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இயற்பியல் துறைத்தலைவரும் மகளிர்க்கழக ஒருங்கிணைப்பாளருமான பெ.சித்ரலேகா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாகதூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.க.நிவேதிதா, தூத்துகுடி மாவட்ட நிதிக்கல்வி அறிவு வல்லுநர் சா.ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். இருவருக்கும் கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி பொன்னாடை போர்த்தி கௌவரவித்தார்.

சிறப்பு விருந்தினர் தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த க.க.நிவேதிதா ‘பெண்குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை, பெண்களுக்கான பாலியல் தொந்தரவு குறித்தும் அதனை எதிர்க்கொள்ளும் முறைகளையும் வழிகளையும் மாணவிகளிடம் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவர்களின் மவுன நாடகப்போட்டி, வாசகம் எழுதும் போட்டி நடைபெற்றது.
இதில் 110 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் 7 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர்க்கழக ஒருங்கிணைப்பாளரும் இயற்பியல் துறைத்தலைவருமான பெ.சித்ரலேகா, தமிழ்த்துறைத்தலைவர் மா.சங்கரேஸ்வரி, உதவிப்பேராசிரியர்கள் ச.ஜெயகுரும்பன், ந.அசோக்குமார், இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர் செல்வி தேவதர்ஷினி, மகாலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

சிறப்பு கருத்தரங்கம்
ஜி.வி. என்.கல்லூரியின் வணிக பகுப்பாய்வு துறை மற்றும் நிறுவன புதுமை கவுன்சில் இணைந்து “உங்கள் திறன்களை மேம்படுத்துங்கள்: புதுமையை எளிதாக்கும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் ” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடத்தின.
இந்நிகழ்ச்சிக்கு வேதியியல் துறைத் தலைவர் பா. உமாதேவி தலைமை வகித்தார். துறைத் தலைவர் மற்றும் தொழில் வழிகாட்டல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கிருபாகரன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி இயக்குநர் பா. மகேஷ்குமார் வாழ்த்துரை வழங்கி, இன்றைய காலத்தில் நுண்ணறிவு கருவிகளின் செயற்கை அவசியத்தை வலியுறுத்தினார்.
சிறப்பு விருந்தினராக செயிண்ட் ஜோசப் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் இணைப் பேராசிரியர் ரா. கந்தையா என்ற தீபக் கலந்து கொண்டு, செயற்கை நுண்ணறிவு கருவிகள் புதுமையை எவ்வாறு எளிதாக்குகின்றன, மாணவர்கள் தங்கள் திறன்களை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து விரிவாக விளக்கினார்.
கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் எஸ். சுகந்தி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். இறுதியில் வணிக பகுப்பாய்வு துறை உதவிப் பேராசிரியர் சி. பிரித்தி நன்றி கூறினார்.







