மாரத்தான் போட்டியில் நகராட்சி பள்ளி மாணவிகள் சாதனை
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் கோவில்பட்டி வட்டார அளவிலான 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது இப்போட்டியில் காந்திநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவிகள் முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்தனர்.

7ம் வகுப்பு மாணவி முனீஸ்வரி முதலிடம், 8ம் வகுப்பு மாணவி முருகலட்சுமி இரண்டாமிடம்,7ம் வகுப்பு மாணவி ரத்தினப்பிரியா மூன்றாமிடம் பெற்றனர்.
அவர்களுக்கு சிறப்பு விருந்தினர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி (தூத்துக்குடி மாவட்ட ஆக்கி கழகம் செயலாளர் ) மற்றும் நாடார் மேல்நிலைப் பள்ளி செயலாளர் ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
i







