கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் கருத்தரங்கு
கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்வி நிறுவனத்தில் “அறிவால் ஆளுமை கொள்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனத்தின் தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை தாங்கினார்.. லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் ஆட்டோமொபைல் துறை முதுநிலை பேராசிரியர் குமாரமுருகன் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக துபாய் எம்.என்.சி., ஆலோசகரும், சர்வீஸ் டூ தி சொசைட்டி நிறுவனருமான ரவி சொக்கலிங்கம் கலந்து கொண்டார். அவரை மாணவி திவ்யா நர்த்தினி அறிமுகப்படுத்தினார்.
துபாய் எம்.என்.சி., ஆலோசகர் ரவி சொக்கலிங்கம் மாணவிகள் மத்தியில் பேசுகையில், “வெற்றிக்கு குறுக்கு வழிகளே கிடையாது – உழைப்பு மட்டும்தான் ஒரே வழி”என்று குறிப்பிட்டார்.
மாணவி அபிநயா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கல்லூரி முதல்வர் சாந்தி ப்ரியா நன்றி கூறினார்.







