சங்கரன்கோவில் புத்த கோபுரத்தின் ஓராண்டு நிறைவு விழா
சங்கரன்கோவில் அருகே மறைந்த முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்தையா 5 ஏக்கர் நிலத்தை புத்தர் கோவில் அமைக்க தானமாக வழங்கி உள்ளார இந்த இடத்தில் உலக அமைதிக்காக புத்த கோபுரம் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த புத்தமத துறவிகளால் கடந்த 25 ஆண்டுகளாக கட்டப்பட்டு கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த கோபுரத்தின் ஓராண்டு நிறைவு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .

120 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம்.மண்டபத்தில் சர்வதேச புத்த துறவிகள் பலர் கூடி உலக அமைதிக்கான பிரார்த்தனை செய்தனர். முன்னதாக காந்திஜியின் புகைப்பட கண்காட்சியை சுதந்திரப் போராட்ட தியாகியும் முன்னாள் ஆட்சியருமான லட்சுமி காந்தன் பாரதி.அவர்கள் திறந்து திறந்து வைத்து பேசினார்,
கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் கும்மி பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சி=ஏற்பாடுகளை லீலாவதி செய்திருந்தார். சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.







