மக்காச்சோளத்திற்கு உரிய விலை கேட்டு கோவில்பட்டியில் முற்றுகை போராட்டம்
Oplus_16908288

கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தை தேசிய விவசாயிகள் சங்கம் சார்பாக மக்காச்சோளத்திற்கு உரிய விலை கேட்டு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது,
தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார், அய்யலுசாமி (வழக்கறிஞர்) முன்னிலை வகித்தார்.இந்த முற்றுகை போராட்டத்தில் சமூக ஆர்வலரும் தொழில் அதிபரும் ஆன ராஜேஷ் கண்ணன் , வில்லிசேரி முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் காசிராஜன்,ஆடு வளர்ப்போர் சங்க மாநில தலைவர் கருப்பசாமி, இயற்கை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கருப்பசாமி, ஒன்றிய தலைவர் ஜெயக்குமார், முன்னாள் தோணுகால் பஞ்சாயத்து துணை தலைவர் சுந்தர்ராஜ் நாயக்கர்,, கிளை தலைவர் தனபதி, கோசலராம் ஆகியோர் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்
போராட்டத்தின் முடிவில் சார் ஆட்சியரின் தலைமை எழுத்தரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர், அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தாறு ஆகிய யூனியன் சார்ந்த பகுதிகளில் மொத்தம் 2 லட்சம் ஏக்கர் விவசாய பரப்பில் மக்காச்சோளம் பயிர் செய்து தற்போது இயந்திரங்கள் உதவியுடன் அறுவடை நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு விவசாயிகளிடம் இருந்து மக்காச்சோளத்தை தனியார் கொள்முதல் விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500 கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு தனியார் வியாபாரிகளால் குவிண்டால் ஒன்றுக்கு 1500 லிருந்து ரூ. 1600 வரை இஷ்டம் போல் கொள்முதல் செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு விவசாயிகள் ரூ 30000 வரை மக்காச்சோள உற்பத்திக்கு செலவு செய்து உள்ளார்கள். இந்த செலவை ஈடு செய்யும் வகையில் கூட இந்த கொள்முதல் விலை இல்லாத நிலையில் விவசாயிகள் கடன்பட்டு மேற்படி கடனையும், அடுத்து வரும் குடும்ப செலவு, கல்வி செலவு மற்றும் இதர செலவுகளை சமாளிக்க முடியாமல் கந்துவட்டி காரர்களிடம் கடன் பெரும் நிலையிலும் தங்களின் விலை நிலங்ளை விற்க வேண்டிய நிலையும் அடமானம் செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டு வருகிறார்கள்.
மத்திய அரசு ஏற்கனவே ஆதரவு விலையாக ( ஆதார விலை ) ரூபாய் 2400 நிர்ணயம் செய்து உள்ள நிலையில், தனியார் வணிகர்கள் வெறும் 1600 க்கு கொள்முதல் செய்வதை தடுத்து msp க்கு கீழே கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், மேற்படி கள்ளத்தனம் செய்யும் அனைத்து வியாபாரிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாய அமைப்புகளை கொண்டவர்களையும் உடன் இணைத்து குழு அமைத்து கள்ளத்தனமாக உடன்பாடு கொண்டு விவசாயிகளை கசக்கி பிழியும் இதுபோன்ற சமூக விரோத சக்திகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.’
அத்துடன் கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் மக்காச்சோள கொள்முதல் நிலையங்கள் அமைத்து ஆதார விலை ரூ. 2400 க்கு கொள்முதல் செய்யவும், வருகிற ஆண்டில் முன் கூட்டியே மக்காசோள விவசாயிகளை அழைத்து பேசி பிரச்சினைகளை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
மத்திய அரசு மக்காச்சோள ஏற்றுமதிக்கு இருக்கும் தடையை அகற்றி அதிகப்படியான மக்காச்சோள உற்பத்தியை கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கு அனுமதியை அளிக்கவும் அதன் மூலம் நமது அரசுக்கு அந்நிய செலாவணியும் உரிய விலையும் கிடைக்கும்
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது,







