அமமுக தலைவர் டிடிவி தினகரன் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் மாரத்தான் போட்டி நடக்கிறது. இதுகுறித்து அமமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமமுக தலைவர் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் .14-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாரத்தான் போட்டி நடக்கிறது. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாட்டில் இதுவரை மாரத்தான் போட்டிக்கு யாரும் வழங்கிடாத அளவில் ரொக்கப்பரிசு வழங்கப்பட […]
கோவில்பட்டியில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் சார் ஆட்சியர் அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நீதிமன்றங்கள், சிறைச்சாலை, டிஎஸ்பி, வட்டாட்சியர், கருவூலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வளாகத்தில் உள்ள சாலை மிகவும் மோசமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. தற்போது பெய்து வரும் மழையில் அரசு அலுவலக வளாகத்தில் உள்ள சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி சிறிய […]
கோவில்பட்டி நகருக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து கண்டு கொள்ளாமல் உள்ள மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, கோவில்பட்டியில் உள்ள சாலை, நீர்நிலை மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும் தமிழ் பேரரசு கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் பேரரசு கட்சி மாநில தலைவர் சரவணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் லட்சுமண பாண்டியன், மாவட்ட பொருளாளர் குமார், சமூக ஆர்வலர் […]
சென்னை வீராங்கனையின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ’தி கேரம் குயின்’ சினிமாப்பட தொடக்கவிழா
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் நடைபெற்ற 6வது சர்வதேச கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி பிடித்த வடசென்னை வீராங்கனை காஜிமாவின் வாழ்க்கை வரலாறு என்பது மிகுந்த வலி மிகுந்தது. மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து ஆட்டோ ஓட்டுநரின் மகளாக வளர்ந்து அப்பாவின் ஆசையான கேரம் விளையாட்டை சகோதரர் துணையுடன் கற்றுக் கொண்டு சர்வதேச விளையாட்டு போட்டியில் வென்று தன் ஏழ்மை நிலையை வென்றவர் காஜிமா. இவரது வலிமிகுந்த வெற்றி […]
கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார், கல்லூரி முதல்வர் . செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஆங்கிலத்துறையின் மூன்றாமாண்டு மாணவி கார்த்திகா வரவேற்று பேசினார். கோவை ஜெ.எஸ்.எஸ் கல்லூரியின் இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் துறை பேராசிரியர் சோபிகா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா குறித்த விழிப்புணர்வு உரைகளை […]
கோவில்பட்டி நகர தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ரஜினிகாந்த் 75வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கிராமம் வேம்படி சுடலை மாடசாமி கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி ஜெயக்கொடி தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக கடம்பூர் ராஜு எம்எல்ஏ கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். விழா ஏற்பாடுகளை கோவில்பட்டி நகர தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற நகர செயலாளர் மகேஸ்பாலா செய்திருந்தார்.ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் […]
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக த.சத்தியமூர்த்தி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, தமிழ்த்துறை, தமிழ் இலக்கியச் சோலை மன்றக் கூட்டம் கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன், முதல்வர் மூ.சுப்புலெட்சுமி ஆகியோர் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ச.ஜெயகுரும்பன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி வாழ்த்துரை வழங்கி சிறப்பு விருந்தினருக்கு பாென்னாடை பாேர்த்தி கவுரவித்தார். தமிழ்த்துறைத் தலைவர் மா.சங்கரேஸ்வரி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். அதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினரான திருப்பத்தூர், தூய இருதய கல்லூரி, தமிழ்த்துறைத்தலைவர் கி.பார்த்திபராஜா ‘பாரதி என்னும் யுகசந்தி’ என்னும் […]
கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன் வரவேற்றார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு 506 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சயில் அவர் பேசியதாவது:- தமிழக முதல்வரை பொருத்தவரை கல்வி, மருத்துவம் என 2 கண்கள் என கூறுகிறார். பள்ளி கல்வி என்பது தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர், […]
தமிழக அரசின் 2026 ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:- 2026 ஆம் ஆண்டிற்கான ”கபீர் புரஸ்கார் விருது” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதானது தகுதியுடைய நபர்களுக்கு தலா ரூ.20,000/-, ரூ.10,000/- மற்றும் ரூ.5,000/- வீதம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் ஆகியோர்கள் நீங்கலாக) சமுதாய […]







