கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி நகருக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து கண்டு கொள்ளாமல் உள்ள மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, கோவில்பட்டியில் உள்ள சாலை, நீர்நிலை மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும் தமிழ் பேரரசு கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் பேரரசு கட்சி மாநில தலைவர் சரவணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் லட்சுமண பாண்டியன், மாவட்ட பொருளாளர் குமார், சமூக ஆர்வலர் பரமசிவம், விவசாய சங்கம் அருமைராஜ், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.







