சென்னை வீராங்கனையின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ’தி கேரம் குயின்’ சினிமாப்பட தொடக்கவிழா

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகானத்தில் நடைபெற்ற 6வது சர்வதேச கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி பிடித்த வடசென்னை வீராங்கனை காஜிமாவின் வாழ்க்கை வரலாறு என்பது மிகுந்த வலி மிகுந்தது.
மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து ஆட்டோ ஓட்டுநரின் மகளாக வளர்ந்து அப்பாவின் ஆசையான கேரம் விளையாட்டை சகோதரர் துணையுடன் கற்றுக் கொண்டு சர்வதேச விளையாட்டு போட்டியில் வென்று தன் ஏழ்மை நிலையை வென்றவர் காஜிமா.

இவரது வலிமிகுந்த வெற்றி வாழ்க்கையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல கர்நாடகத்தை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் திரைப்படமாக தயாரிக்க முன்வந்தது. காஜிமாவின் வாழ்க்கை வரலாற்று பயோபிக் ஆக உருவாகும் இந்த படத்துக்கு ‘தி கேரம் குயின்’ என பெயரிட்டு பிரமாண்ட பூஜையுடன் பட தொடக்க விழா நடை பெற்றது.
இப்படத்தில் காஜிமாவின் கதாபாத்திரத்தில் நடிகை ரந்தியா பூமேஷ் நடிக்கிறார்
படத்தொடக்க விழாவில் பயோபிக்கின் உண்மை கேரம் குயின் காஜிமா தன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

கதையின் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் காளி வெங்கட் கூறும்போது,”. இந்த படத்தின் கதைமிக சுவாரஸ்யமானது. முழு கதையும் மிகுந்த எமோஷனலானது. படம் பார்க்கிற ஒவ்வொரும் கண்டிப்பாக கண்ணீர் விடுவார்கள். அத்தனை அழுத்தமான கதை. படம் வெளியான பிறகு நிறைய பேசுகிறேன்.” என்றார்,
தயாரிப்பாளர் நிஹான் என்டர்டெயின்மென்ட்ஸ் நாகேஷ் பாட்டில்
இயக்குனர் முரளி, ஆகியோர் படம் பற்றி பேசினார்கள்.
நடிகையும் ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனையுமான கோமல் சர்மா பேசுகையில்,” கேரம் குயின் கதையை கேட்டபோது என் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. காரணம் நான் ஸ்குவாஷ் விளையாட்டில் பெற்ற பல அனுபவங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் தெரியும். அந்தவகையில் இந்த கேரம் குயின் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.: என்றார்.

சிறப்பு அழைப்பாளரான தயாரிப்பாளர் எஸ்.கே.பிக்சர்ஸ் சம்பத், ஷீலா இளங்கோவன், காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் எழுத்தாளர் சௌரப் எம். பாண்டே உட்பட பலர் கலந்து கொண்டனர்.







