எஸ்.எஸ்.டி.எம்.கல்லூரியில் இயற்கை மருத்துவம், யோக அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கம்

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார், கல்லூரி முதல்வர் . செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஆங்கிலத்துறையின் மூன்றாமாண்டு மாணவி கார்த்திகா வரவேற்று பேசினார்.
கோவை ஜெ.எஸ்.எஸ் கல்லூரியின் இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் துறை பேராசிரியர் சோபிகா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா குறித்த விழிப்புணர்வு உரைகளை வழங்கினர்.

ஆரோக்கியமான மற்றும் தரமான தூக்கம் குறித்தும் ஆரோக்கியமான உணவு முறை குறித்தும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.
கருத்தரங்கில் ஜெ.எஸ்.எஸ் கல்லூரி மற்றும் எஸ்.எஸ்.டி.,எம்.கல்லூரி மாணவர்-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சி முடிவில் ஆங்கிலத்துறை இரண்டாமாண்டு மாணவி லாவண்யா நன்றி கூறினார்.







