ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்னதானம்
கோவில்பட்டி நகர தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ரஜினிகாந்த் 75வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கிராமம் வேம்படி சுடலை மாடசாமி கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகி ஜெயக்கொடி தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக கடம்பூர் ராஜு எம்எல்ஏ கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
விழா ஏற்பாடுகளை கோவில்பட்டி நகர தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற நகர செயலாளர் மகேஸ்பாலா செய்திருந்தார்.ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்







