கோவில்பட்டி நீதிமன்ற வளாக சாலையை சீரமைக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் வாழை நடும் போராட்டம்

கோவில்பட்டியில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் சார் ஆட்சியர் அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நீதிமன்றங்கள், சிறைச்சாலை, டிஎஸ்பி, வட்டாட்சியர், கருவூலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த வளாகத்தில் உள்ள சாலை மிகவும் மோசமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை.
தற்போது பெய்து வரும் மழையில் அரசு அலுவலக வளாகத்தில் உள்ள சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி சிறிய குளங்கள் போல் காணப்படுகிறது.
எந்த சமயத்திலும் ஆட்கள் நடமாடம் மற்றும் வாகன் போக்குவரத்து நிறைந்த இந்த சாலை படுமோசமான நிலையில் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (12.12.2025). வெள்ளிக்கிழமை வாழை நடும் போராட்டம் நடத்தப்பட்டது.
குண்டும் குழியுமாக பழுதடைந்துள்ள சாலையில் வாழை மரங்களை நட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்,
நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டசபை தொகுதி ஒருங்கிணைப்பாளர் த.சத்தியமூர்த்தி, மாநில உழவர் பாசறை மருதம் மாரியப்பன், வணிகர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபால், பால்பாண்டி,லெனின், வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், தமிழ் மீட்சிப்பாசறை ஒருங்கிணைப்பாளர் குமாரராசா, வீரதமிழ் முன்னணி மாவட்ட துணை செயலாளர் ஹரிஹரன், தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர் ,மகாராஜா,சண்முகராஜ், கனி, இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், மாநில இளைஞர் பாசறை செண்பகபாண்டி, மாவட்ட செயலாளர் பழனி, மாவட்ட தலைவர் சிம்மன், இளைஞர் பாசறை தியாகு, குருதி கொடை பாசறை அலெக்ஸ் சேவியர், . தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்நித்தியா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.







