கோவில்பட்டி வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி தமிழ் இலக்கிய சாேலை மன்ற கூட்டம்
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, தமிழ்த்துறை, தமிழ் இலக்கியச் சோலை மன்றக் கூட்டம் கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன், முதல்வர் மூ.சுப்புலெட்சுமி ஆகியோர் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ச.ஜெயகுரும்பன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி வாழ்த்துரை வழங்கி சிறப்பு விருந்தினருக்கு பாென்னாடை பாேர்த்தி கவுரவித்தார். தமிழ்த்துறைத் தலைவர் மா.சங்கரேஸ்வரி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினரான திருப்பத்தூர், தூய இருதய கல்லூரி, தமிழ்த்துறைத்தலைவர் கி.பார்த்திபராஜா ‘பாரதி என்னும் யுகசந்தி’ என்னும் தலைப்பில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
பாரதியின் படைப்புகள், அவரது படைப்புகளில் உள்ள புதுமை வேட்டல், சிந்தனைதிறன், பெண் விடுதலை, பெண் உரிமை குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.
முடிவில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ந.அசோக்குமார் நன்றி கூறினார்.







