தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தற்போதைய நிலையில் நான்குமுனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா உள்ளது.மேலும் அ.தி.மு.க. தனது கூட்டணிக்குள் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வை கொண்டு வர விருப்பப்படுகிறது. அதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த நிலையில் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை அண்மையில் நடத்தி முடித்த அ.தி.மு.க. சூட்டோடு, சூட்டாக சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு […]
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டார வியாபாரிகள் வர்த்தகக் கூட்டமைப்பு சார்பாக நிலக்கோட்டையில் வர்த்தக வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது.சங்கப் பொருளாளர் முருகன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பெயர் அமைப்பு மாவட்டத் தலைவர் நடராஜன், மாவட்ட பொருளாளர் சந்தானம், மாவட்ட முதன்மை துணைத் தலைவர் ரவி சுப்பிரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் வணிகர்களுக்கு இன்றைக்கு நிலவும் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. வருகிற […]
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கோவில்பட்டி தாலுகா அளவிலான பேட்மிட்டன் விளையாட்டு போட்டி யூனியன் கிளப் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட அணிகள் போட்டிகளில் பங்கேற்றன.. போட்டிகள் தொடக்க நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார் செயலாளர் பழனிக்குமார் வரவேற்று பேசினார். மாவட்ட உதவிஆளுநர் பரமேஸ்வரன் போட்டியை துவக்கி வைத்தார். ரோட்டரி கிளப் இணைச் செயலாளர் ரத்தினகுமார் முன்னிலை வகித்தார், ரோட்டரி உறுப்பினர்கள் செந்தில்குமார், விக்னேஸ்வரன், ஆசியாஃபார்ம் பாபு, மாரியப்பன், இளங்கோ, அருண், […]
தூத்துக்குடி விகாசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலவாழ்வுச் சங்கம் மற்றும் மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு சங்கம் இணைந்து ஒருங்கிணைத்த உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தின. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் கலந்துகொண்டு உரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட […]
ஈரோடு அருகே உள்ள கீழ் திண்டல் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் மதன்குமார் (வயது 21). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உறவினரான சுஜித்ரா (19) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி இரவு வீட்டில் விஷம் குடித்து மதன்குமார் மயங்கி கிடந்ததாக கூறி உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி […]
தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் சரிவடைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 18 சதவீதம் வீழ்ச்சி அடைந்து உள்ளது என ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், குழந்தைகள் பிறப்பு விகிதம் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மட்டும் குறைவதற்கான காரணம் குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:- , கடந்த 1990-ம் ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் குழந்தை பிறப்பு என்பது குடும்ப வாழ்க்கையின் இயல்பான அம்சமாகவே இருந்தது. திருமணத்துக்கு பிறகு விரைவில் கர்ப்பம், […]
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 15, 16 […]
கோவில்பட்டியில் ஏஐடியுசி ஆட்டோ,லோடு ஆட்டோ,பயணிகள் ஆட்டோ,சுமை தூக்கும் தொழிலாளர்கள்,அரசு போக்குவரத்துக்கழக சங்கம் ஆலோசனைக்கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஜீவா இல்லத்தில் நடைபெற்றது. ஏஐடியுசி சங்க இணைப்பு கட்டணம் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு ஏஐடியுசி வட்டாரத்தலைவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார்.செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாபு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் லோடுமேன் சங்கம்(காமராஜர் சிலை) பொருளாளர் தர்மராஜ், இளையரசனேந்தல் ரோடு சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் தலைவர் வள்ளிராஜ், அரசு போக்குவரத்துக்கழகம் சங்க மணிமாறன் […]
கோவில்பட்டி தாலுகா சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் 2 அமர்வுகளில் நடந்தது. சார்பு நீதிபதி மாரிக்காளை தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த், மணிமேகலா முன்னிலையில் நடந்தது. இதில், மோட்டார் வாகன விபத்து, உரிமையியல் வழக்குகள், சிறுகுறு வழக்கு, காசோலை மோசடி வழக்கு மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 1206 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 780 வழக்குகளுக்கு சமரச தீர்வு மூலம் ரூ.1,75,90,644-க்கு […]
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் சமூகப் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் ஆலய தூய்மை பணித் திட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் சிதம்பராபுரத்தில் அமைந்துள்ள அறியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் இந்த துப்புரவு நடவடிக்கை நடைபெற்று, கோவில் சுற்றுப்புறக் குப்பைகள் அகற்றுதல், புல் வெட்டுதல், நடைபாதைகள் சுத்தம் செய்தல், மற்றும் வளாக அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. மாணவர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு காரணமாக கோவில் வளாகம் புத்தொளி பெற்றது. நிகழ்ச்சியை […]







