20 ம் தேதி விக்ரமராஜா நிலக்கோட்டை வருகை: சிறப்பான வரவேற்பு அளிக்க ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டார வியாபாரிகள் வர்த்தகக் கூட்டமைப்பு சார்பாக நிலக்கோட்டையில் வர்த்தக வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது.சங்கப் பொருளாளர் முருகன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பெயர் அமைப்பு மாவட்டத் தலைவர் நடராஜன், மாவட்ட பொருளாளர் சந்தானம், மாவட்ட முதன்மை துணைத் தலைவர் ரவி சுப்பிரமணி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில் வணிகர்களுக்கு இன்றைக்கு நிலவும் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. வருகிற 20 ம் தேதி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம் விக்ரமராஜா திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் நிலக்கோட்டையில் சிறப்பான வரவேற்பளிக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டையில் அன்றைய தினம் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடத்தவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த கூட்டத்தில் சங்க கவுரவத் தலைவர் ரமேஷ், செயலாளர் கணேசன், பொருளாளர் சந்திரசேகரன், ஆலோசகர் கணேசன், சங்க ஆலோசகர் சரவணன், மாவட்ட பொறுப்பாளர்கள் பாரதி முருகன், சசிகுமார், கார்த்திகேயன், குணசேகர பாண்டியன், ராமச்சந்திரன், ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







