கோவில்பட்டி தாலுகா அளவிலான பேட்மிட்டன் போட்டி
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கோவில்பட்டி தாலுகா அளவிலான பேட்மிட்டன் விளையாட்டு போட்டி யூனியன் கிளப் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட அணிகள் போட்டிகளில் பங்கேற்றன..
போட்டிகள் தொடக்க நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார் செயலாளர் பழனிக்குமார் வரவேற்று பேசினார்.

மாவட்ட உதவிஆளுநர் பரமேஸ்வரன் போட்டியை துவக்கி வைத்தார். ரோட்டரி கிளப் இணைச் செயலாளர் ரத்தினகுமார் முன்னிலை வகித்தார்,
ரோட்டரி உறுப்பினர்கள் செந்தில்குமார், விக்னேஸ்வரன், ஆசியாஃபார்ம் பாபு, மாரியப்பன், இளங்கோ, அருண், ரவிமாணிக்கம், ராஜமாணிக்கம்,பிரபாகரன்,வெங்கடேஷ் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

வெற்றி பெற்ற அணியினருக்கு வெற்றிக்கோப்பையும் ரொக்கபரிசும் வழங்கப்பட்டது. பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.







