தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
தூத்துக்குடி விகாசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலவாழ்வுச் சங்கம் மற்றும் மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு சங்கம் இணைந்து ஒருங்கிணைத்த உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தின.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் கலந்துகொண்டு உரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங்
தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலவாழ்வு சங்க மாநில தலைவர் மருத பெருமாள், செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் செல்வகுமரன்,, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்







