கோவில்பட்டி மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 780வழக்குகளுக்கு சமரச தீர்வு

கோவில்பட்டி தாலுகா சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் 2 அமர்வுகளில் நடந்தது.
சார்பு நீதிபதி மாரிக்காளை தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த், மணிமேகலா முன்னிலையில் நடந்தது.

இதில், மோட்டார் வாகன விபத்து, உரிமையியல் வழக்குகள், சிறுகுறு வழக்கு, காசோலை மோசடி வழக்கு மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 1206 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில், 780 வழக்குகளுக்கு சமரச தீர்வு மூலம் ரூ.1,75,90,644-க்கு தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர், வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.







