சுமை தூக்கும் தொழிலாளர்கள், சங்க ஆலோசனை கூட்டம்

கோவில்பட்டியில் ஏஐடியுசி ஆட்டோ,லோடு ஆட்டோ,பயணிகள் ஆட்டோ,சுமை தூக்கும் தொழிலாளர்கள்,அரசு போக்குவரத்துக்கழக சங்கம் ஆலோசனைக்கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஜீவா இல்லத்தில் நடைபெற்றது.
ஏஐடியுசி சங்க இணைப்பு கட்டணம் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு ஏஐடியுசி வட்டாரத்தலைவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார்.செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாபு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் லோடுமேன் சங்கம்(காமராஜர் சிலை) பொருளாளர் தர்மராஜ், இளையரசனேந்தல் ரோடு சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் தலைவர் வள்ளிராஜ், அரசு போக்குவரத்துக்கழகம் சங்க மணிமாறன் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்







