• October 21, 2026

Month: September 2025

கோவில்பட்டி

யாஷிகா ஆனந்த் நடிக்கும் புதிய படம்: கோவில்பட்டி, சாத்தூர் பகுதியில் படப்பிடிப்பு நடக்கிறது

நடிகை யாஷிகா ஆனந்த், நடிகர் ரத்தன் மௌலி , விஜய் டிவி புகழ் யோகி, தேஜா ஸ்ரீ, சஞ்சய் ஷங்கர் மற்றும் பலர் நடிக்கும் ‘டாஸ்’ (TOSS). படத்தின் பூஜை கோவில்பட்டியில் நடைபெற்றது. பிளாக் டைமண்ட் ஸ்டுடியோ சார்பில் சையத் ஜாபர் தயாரிப்பில், சகு பாண்டியன் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது. படத்தின் பூஜையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்,.எல்.ஏ.கலந்து கொண்டு படக்குழுவினரை  வாழ்த்தினார். படத்தின்  இயக்குனர் சகு பாண்டியன் கூறியதாவது:- மர்மமான முறையில் மூன்று […]

கோவில்பட்டி

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம்  தொடக்கம்                                   

அரசு பள்ளிகளில் படித்து கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும்  தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம்  கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள்       கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த  திட்டம் தொடக்க விழா, கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரிச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். நாடார் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் ஜான் கணேஷ், சமூகசேவகர். அமலி பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர். ஆர்.செல்வராஜ் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக […]

கோவில்பட்டி

அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

கிளீன் இந்தியா கிரீன் இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும்விழா கோவில்பட்டி அருகே உள்ள காளாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்  நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் முனியசாமி தலைமை தாங்கினார்,. உதவி தலைமை ஆசிரியர் செல்லையா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பயிற்சி டிஎஸ்பி சுரேஷ், வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தி, திருவள்ளுவர் மன்றம் துணைத் தலைவர் திருமலைமுத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்று நட்டினர். நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர் கண்ணன், ஆசிரியர் பாலகணேஷ்,மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் […]

கோவில்பட்டி

வீட்டுமனைப் பட்டா வழங்ககோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு இந்திரா காலனி, கணேஷ் நகர், துளசிங்க நகர், ராஜகோபால் நகர் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக  வீடுகள் கட்டி குடியிருக்கும் மக்கள் முறையாக வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் இணைப்பு கட்டணம் ஆகியவற்றை செலுத்தி வருகின்றனர்; .இப்பகுதி மக்கள் தாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி பலமுறை மனுக்கள் அளித்துள்ள நிலையில் அதுசம்பந்தமான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் […]

கோவில்பட்டி

பெண்கள் ஆரோக்கியம்,உடற்பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி குறித்து நிலவும் தவறான நம்பிக்கைகளைத் தகர்க்கும் வகையில் “பெண்களின் ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி குறித்த கட்டுக்கதைகளை உடைத்தல்”என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பெண்கள் ஆரோக்கியம், சரியான உணவு முறை, பருவகால பராமரிப்பு உடற்பயிற்சியின் அவசியம் உடல் எடை குறைப்பு தொடர்பான தவறான நம்பிக்கைகளை கலைக்கும் வகையில் பிஸியோதரபிஸ்ட் மருத்துவர் செண்பகவல்லி சிறப்புரையாற்றினார். பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன், மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ், முன்னாள் மாவட்ட உதவி ஆளுநர் முத்துசெல்வம், சீனிவாசன், ரெயில் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சிவராஜா, ரயில் நிலைய சுகாதார ஆய்வாளர் அருள் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பழனி குமார் அனைவரையும் வரவேற்றார். ரெயில் நிலைய  வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் […]

செய்திகள்

சிபிஎஸ்இ 10 , 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்று அழைக்கப்படும் சிபிஎஸ்இ நிர்வாகத்தின்கீழ் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. அதேபோல், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2025-26ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது என்ற அறிவிப்பை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி முதல் ஜுலை 15ம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]

கோவில்பட்டி

சிலப்பதிகாரம் ஒப்புவித்து சாதனை படைத்த  அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

கோவில்பட்டி அருகே சாத்தூர் வட்டம் ந. சுப்பையாபுரம் , அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வேணி, மற்றும் வீர்ச்செல்வி ஆகியோர் சிலபத்திகாரம் முழுமையும் படித்து மனப்பாடம் செய்து ஒப்புவித்து சாதனை படைத்துள்ளனர்,. சிலப்பதிகாரம் தந்த இளங்கோ அடிகள் அருளிய 5270  வரிகளையும் சிறிதும் பிசிறு இல்லாமல் அழகிய தமிழில் ஒப்புவித்த மாணவிகள் இருவருக்கும் பயிற்சி அளித்தவர் தமிழ் ஆசிரியர் ராஜசேகர் ஆவார், மாணவிகள் இருவருக்கும் பள்ளியில் பாராட்டு கூட்டம் நடைபெற்றது, தலைமை ஆசிரியர் முனியப்பன்  தலைமை தாங்கினார். […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கல்லூரியில் தேசிய சேவை திட்டம் நாள்

கோவில்பட்டி ஜி. வெங்கடசாமி நாயுடு கல்லூரி (தனாட்சி) தேசிய சேவை திட்டத்தின் (NSS-180) சார்பில் ஒழுங்குமுறை நிகழ்ச்சி கல்லூரி ஆடிட்டோரியம் ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் எம். சுப்புலட்சுமி தலைமை தாங்கி பேசினார்.கல்லூரி இயக்குநர் டாக்டர் பி. மகேஷ் குமார் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் என்,.எஸ்.எஸ். திட்ட அதிகாரியும், கல்லூரி வாணிபத் துறைத் தலைவர் மற்றும் உதவி பேராசிரியருமான எஸ். பழனிகுமார் பங்கேற்று பேசினார், கல்லூரிச் செயலர், முதல்வர் மற்றும் இயக்குநரின் […]

செய்திகள்

`சீமான், விஜயலட்சுமி குழந்தைகள் அல்ல’ -சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும்ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீமான் […]